புதிய குழுவை அமைத்து கல்விக்கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்தியுள்ளது.
மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேர் புதிய கல்வி கொள்கை தொடர்பாக எம் பி க்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் கருத்து கேட்டார். திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் ஆர் எஸ் பாரதி இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, புதிய கல்வி கொள்கை தொடர்பாக அளிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை முரண்பாடானது என்றும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைபாட்டுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தற்போது நிபுணர் குழுஅளித்த அறிக்கையை நிராகரித்து புதிய குழு மூலம் புதிய அறிக்கையை உருவாக்க மத்திய அமைச்சரை தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறிய திருச்சி சிவா புதிய குழு அமைக்கப்படும் என பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்ததாக கூறினார்.