புதுடில்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றலாம் என பார்லி., கூட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஆதாயம் தரும் பதவி :
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது அசாமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு பஞ்சாப் பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்ற அழைப்பு வந்தது. இப்பொறுப்பை ஏற்றால் ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக குற்றச்சாட்டு எழும். எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு ராஜ்யசபாவிற்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார்.
அனுமதி :
கடந்த ஜூலை மாதம் எழுதப்பட்ட கடிதத்திற்கு பார்லி., கூட்டுக்குழு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் பஞ்சாப் பல்கலையில் மன்மோகன் பணியாற்றலாம் எனவும், அவர் எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படமாட்டார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் சம்பளம் :
பல்கலையில் மன்மோகன் சிங் வகுப்பு எடுக்கும் நாளில், அவருக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட், கார், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன் ஒருநாள் சம்பளமாக ரூ.5,000 ஊதியமாக பல்கலை வழங்கும்.
English Summary:
Former Prime Minister Manmohan Singh will serve as honorary professor of barley., Approved the joint committee.