மங்களூரு: மங்களூருசீக்கியர்களின் மனிதாபிமானம்சில்லரை தட்டுப்பாட்டால், பாதிக்கப்பட்ட வெளியூர் பயணிகள், கூலி தொழிலாளர்களுக்கு, மங்களூரு சீக்கியர் சமுதாயத்தினர், இலவச உணவு வழங்கினர்.செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களால், வெளியூரிலிருந்து வந்து வேலை செய்பவர்கள், கூலி தொழிலாளர்கள் என, பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பசியை போக்க, மங்களூரில் உள்ள சீக்கியர் சமூகத்தினர் முன் வந்துள்ளனர்.சில்லரையின்றி உணவு வாங்க முடியாமல் கஷ்டப்படும் மக்களுக்காக, மங்களூரு நகர ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம், 10 சீக்கியர் குடும்பத்தினர் உணவு சமைத்து, சாதம், சாம்பார் என, 1,000 பேருக்கு வழங்கினார். ஏராளமான ரயில் பயணிகளும், ஆவலுடன் வந்து வாங்கி சென்றனர். நல்ல வரவேற்பு கிடைத்ததால், நேற்று, 2,000 பேருக்கு உணவு சமைத்து வழங்கினர்.இச்சமூக உறுப்பினரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான பல்விந்தர் சிங் நேற்று கூறியதாவது:மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், சில்லரை தட்டுப்பட்டால் நிலை தடுமாறினாலும், அரசின் முடிவை மக்கள் மனமார வரவேற்றுள்ளனர். மக்களின் வசதிக்காக, இந்த ரயில் நிலையத்தில் இரண்டு கவுன்டர்கள் திறந்து, உணவு வழங்கி வருகிறோம். இதற்காக இரண்டு நாள் அனுமதி பெற்றுள்ளோம்.இதை மேலும் சில நாட்கள் நீட்டிக்க முடிவு செய்திருந்தோம். நாங்களும் சில்லரை இல்லாமல் தடுமாறி வருகிறோம். மக்களுக்கு உணவு பரிமாற, 10 பேர் முன்வந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கே.ஜி.எப்.,கறிக்கடை வியாபாரிகள் தவிப்புராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டுகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக, இறைச்சி வியாபாரம் ஸ்தம்பித்தது.பால், பழம், ஸ்வீட் ஸ்டால்களிலும், மளிகை கடைகளிலும் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை.வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று, மார்க்கெட்டில் வியாபாரம் களை கட்டும். அன்று தான் பெரும்பாலான தினப்பயணிகள் ஓய்வில் இருப்பது வழக்கம். வீட்டுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கி செல்ல மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்படும்.கே.ஜி.எப்.,பில், 500 இறைச்சிக்கடைகள் உள்ளன. இங்கு ஞாயிற்றுக்கிழமையில் அதிகளவு வியாபாரம் நடப்பது வழக்கம். ஆனால், நேற்று ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட்டில் சிக்கன், மட்டன், பீப், மீன் கடைகளில் கூட்டமே இல்லை.வங்கிகளில், 500, 1000 ரூபாய்களுக்கு மாற்றாக, 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதை வைத்து, 20 ரூபாய்க்கு பூவும், 50 ரூபாய்க்கு பழமும் வாங்க முடியவில்லை. சில்லரை தட்டுப்பாட்டினால், நடுத்தர மக்கள் சிரமப்பட்டனர்.காய்கறி வாங்க சென்றால், சில்லரை இருக்கிறதா என்ற கேள்வியை தான் வியாபாரிகள் கேட்கின்றனர். நகைக்கடைகளில் மட்டுமே சில்லரை பிரச்னை ஓரளவு பரவாயில்லை.
என் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த, நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்றேன். பழைய, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து விட்டனர். வங்கிக்கு சென்று, ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று, நான்காயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை வாங்கினேன். பசித்ததால், ஓட்டலுக்கு சென்று, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தால், வாங்க மறுக்கின்றனர். இவ்வளவு சிரமம் அடைந்தாலும் நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை வரவேற்கிறேன்.எல்.நிர்மலா ராணி, அசோக் நகர்
என் நீரிழிவு நோய்க்கான மாத்திரை தீர்ந்து விட்டது. மருந்து கடைகளில் பழைய, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதாக கேள்விப்பட்டேன். வங்கியில் கூட்டம் அதிகமாயிருக்கும். 10 நாள் கழித்து பழைய நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என்றிருந்தேன். மாத்திரை வாங்க வேண்டிய அவசியத்தால், வேறு வழியின்றி வங்கி வாசலில் காத்திருந்தேன். ஒரு மணி நேரம் கடந்த நிலையில், என் மொபைல் போனுக்கு, நவ. 13, மற்றும், 14 ஆகிய இரண்டு நாள் மட்டும் பழைய, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கி, மருந்து விற்பனை செய்கிறோம் என்று மருந்து கடையிலிருந்து தகவல் அனுப்பியிருந்ததை பார்த்து, ஆறுதல் அடைந்தேன். ஆர்.பூர்ணசிங், ஹெப்பால்
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் என் கடையில் சிக்கன் வியாபாரம் அமோகமாயிருக்கும். ஆனால், 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. நேற்று காலை, 11:00 மணி வரை இரண்டே வாடிக்கையாளர்கள் வந்தனர். அதிலும் ஒருவர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வந்தார். சில்லரை இல்லாததால், அவரும் சென்று விட்டார்.முனீர் அகமது, சிக்கன் கடை உரிமையாளர், ஜே.சி., நகர்
மைசூருகுறைந்த அளவு பால் வாங்குபவர்கள் அவஸ்தை பால் வியாபாரிகளிடமிருந்து செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு, மைசூரு, சித்தார்த்தா நகர் பன்னுார் ரோட்டில் உள்ள, மைசூரு டெய்ரி நிர்வாகம் பால் வழங்கி வருகிறது.புதிய ரூபாய் நோட்டுகள் இன்னும் சரளமாக புழங்காததால், அரசு கொடுத்த அவகாசம் காரணமாக, பால் பூத்கள், சிறிய பால் விற்பனையாளர்கள், பொது மக்களிடமிருந்து பழைய நோட்டுகளை வாங்கி, பால் வழங்குகின்றனர்.இந்த நிலைமை, 500, 1,000 ரூபாய் வரை பால் வாங்குபவர்களுக்கு கட்டுபடியாகிறது. ஆனால், அரை லிட்டர் முதல், 2 லிட்டர் வரை வாங்குபவர்களுக்கு செல்லாத நோட்டுகள் வாங்கப்படாது என டெய்ரி வட்டாரம் அறிவித்துள்ளது.
பெங்களூருதினக்கூலிகள் பெரும் அவதிவார இறுதியில் ஊதியத்தை பெறும் தினக்கூலிகள், உரிய ஊதியம் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தினக்கூலிகளுக்கு வழக்கமாக வார இறுதியில் சனிக்கிழமையன்று தான் ஒப்பந்ததாரர்கள் சம்பளம் வழங்குவதுண்டு.தற்போது, பல பகுதிகளில் தினக்கூலிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அவர்களுக்கு பட்டுவாடா செய்யும் அளவுக்கு தேவையான சில்லரை நோட்டுகள் கிடைக்கவில்லை.இதனால் சம்பளம் கிடைக்காமல் பல தினக்கூலிகள் ஒரே நாளில் ஏழைகளாகிவிட்டனர். செக் கொடுத்தாலும், ஏற்கும் நிலையில் அவர்கள் இல்லை.ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான அளவு வங்கிகளில் பண பட்டுவாடா செய்யவும் முடியாது என்பதால், தினக்கூலிகள் சிரமத்துடன் வாழ்க்கை நடத்துகின்றனர்.அரிசி, பருப்பு வகைகள் சர்க்கரை, வெல்லம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதிலும் மொத்த உணவு தானிய வர்த்தகர்கள் பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர். உணவு தானிய கொள்முதல் வர்த்தகத்தில், பாதி ரூபாய் நோட்டுகளாகவும், பாதி காசோலை மூலமாகவும் நடைபெறுகிறது.வினியோகஸ்தர்கள் ரொக்கமாக கேட்பதால் பிரச்னை எழுந்துள்ளது.ஏனெனில், வினியோகஸ்தர்கள், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும்போது, அவர்களுக்கும், லாரி போக்குவரத்துக்கும் ரொக்கமாக பணம் கொடுக்க வேண்டும். பண புழக்கம் சகஜ நிலைக்கு வரும் வரை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக மொத்த விற்பனை வர்த்தகர்கள் கூறினர்.
பாகல்கோட்காசோலை ஏற்க விவசாயிகள் மறுப்புபாகல்கோட்டில் தேவையான அளவு புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வராததால், விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்துக்கு பதிலாக, காசோலை அளிக்க மொத்த வியாபாரிகள் தயாராக உள்ளனர். ஆனால், விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளதால், வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, வர்த்தகர்கள் ஏ.பி.எம்.சி.,யிடம் கோரிக்கை வைத்துள்னர்.ஆனால், விவசாயிகள் ஒப்பு கொள்ளவில்லை. வெங்காயம் அழுகும் பொருள் என்பதால், இருப்பு வைத்து விற்பனை செய்ய வழியில்லை. நிலைமை சரியாகும் வரை காத்திருக்கிறோம். தற்போதுள்ள சரக்குகளை எடுத்து கொண்டு பணத்தை இரண்டு வாரங்கள் கழித்து வாங்கி கொள்கிறோம் என்று விவசாயிகள் கூறினர். நேற்று முன்தினம் வர்த்தகர்கள் கோரிக்கையை ஏற்று பாகல்கோட் ஏ.பி.எம்.சி., மையம் மூடப்பட்டதை அறிந்த கலெக்டர் பி.ஏ.மேகான்னவர் உடனடியாக மார்க்கெட்டை திறக்கும்படி உத்தரவிட்டார்.
நவம்பர் 9 முதல் 12 வரை மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 360 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்ரீராமபுரம் தேவய்யா பார்க் அருகில் உள்ள கனரா வங்கியில் 5 மாத கர்ப்பிணி, பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய காத்திருந்தார். நீண்ட நேரமானதால், வரிசையிலிருந்து விலகி வங்கியினுள் செல்ல முயன்றார். அதற்கு வரிசையில் நின்ற, 'பெண்களே' அவர் உள்ளே செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. அங்கு நின்றிருந்த பெண் போலீசார், அவரை வங்கிக்குள் அழைத்து சென்று டெபாசிட் செய்ய உதவினார்.பெங்களூரு ஆர்.டி., நகர் புவனேஸ்வரி நகர் பிரதான சாலையில் உள்ள இறைச்சி கடையில், ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி, வாடிக்கையாளர்கள் பெற்று சென்றுள்ளனர்.பெங்களூரில் வங்கி முன்பு கியூவில் நின்று கொண்டிருந்த பொது மக்களுக்கு, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், ஜூஸ் பாக்கெட் வழங்கினார்.
மின் கட்டணம் செலுத்துபவர்கள், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம். மக்களின் நலனை முன்னிட்டு, மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம்.டி.கே.சிவகுமார்மின்சார துறை அமைச்சர்