ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசின் இந்த உத்தரவை கண்டித்து, சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை பாடையில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் தோல்விகளை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.