விருதுநகர் நகராட்சியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, உதவி பொறியாளர் இல்லத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் நகராட்சியின் 34-வது வார்டுக்கு உட்பட்ட மணிநகர், கத்தாலம்பட்டி தெரு, பனையடிதெரு உள்ளிட்ட பகுதிகளில் 1௦௦௦-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த 2௦ நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் நகராட்சி உதவி பொறியாளர் முருகேஷ் இல்லத்தை முற்றுகையிட்டனர். தண்ணீர் வராததால், தாங்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் அவர்களை சமாதானம் செய்த உதவி பொறியாளர், இன்னும் இரண்டு நாட்களில் குடிநீர் சப்ளை சீராகும் என்றும், அதுவரை லாரி முலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதன்பிறகு மக்கள் முற்றுகையை கைவிட்டனர்.
English Summary:
Virudhunagar municipal drinking water provided in the last 20 days, to protest, to help engineer the storming of the house and held a public protest.