புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
அமளி:
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் பார்லிமென்டின் இருஅவைகளும் அமளியை ஏற்படுத்தியது. இதனால் அவைகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டன. ராஜ்யசபாவில் மட்டும் நேற்று முன்தினம் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு:
இந்நிலையில் இன்று அவை கூடியதும், ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து அமளி ஏற்பட்டது. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி வந்து ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து விவாதத்தில் பங்கேற்று விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவிலும் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால், லோக்சபா திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மோதல்:
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், விவாதம் மட்டுமே போதும் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விவகாரத்தில், இரு தரப்பிற்கும் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. ராஜ்யசபாவில் உரி தாக்குதல் குறித்து பேசிய குலாம் நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது. ஆனால் இதனை ஏற்க ஆசாத் மறுத்து விட்டார்.
ஆலோசனை:
இந்நிலையில், பார்லிமென்டில் அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, ஆனந்த் குமார், வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ., எம்.பி.,க்கள் லோக்சபாவில் இருக்க வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary:
Following the uproar over the issue of withdrawing the bill, the opposition parties have struck and the Houses of Parliament was adjourned.