பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வந்தது.
இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67.13-ல் இருந்து ரூ.65.41 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.58.02-ல் இருந்து 56.24 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 முறை உயர்ந்த பெட்ரோல் விலை இப்போது சிறிதளவு குறைந்துள்ளது. அதேபோல, டீசல் விலை அக்டோபர் மாதத்தில் இருந்து மூன்று முறை உயர்ந்தது; இப்போது குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கடைசியாக நவம்பர் 5-ஆம் தேதி பெட்ரோல் விலையை 89 பைசாவும் டீசல் விலையை 86 பைசாவும் அதிகரித்தன.