ஊராட்சிகளில் வரி வசூலிக்கப் படாததால் அடிப்படை பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்ததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் ஊராட் சிகளில் வரி வசூல் செய்தல், குடிநீர் வரி வசூலித்தல் போன்ற பணிகள் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. வரி செலுத்த வரும் பொதுமக்களிடமும் வரி வசூலிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிகிறது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பில் இருக்கும்போது ஊராட்சி தலைவர்கள் வரி வசூல் செய்து ரசீது வழங்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது தனி அலுவலரிடம் பொறுப்பு உள்ளதால் இந்த பணிகள் நடை பெறவில்லை என்றும் குடிநீர் பழுது நீக்கம் செய்ய வேண்டிய உதிரிப் பாகங்கள், மின் விளக்கு உதிரிப்பாகங்கள், சுகாதாரப் பணிகளுக்கு வேண்டிய பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இன்னும் வாங்க முடியாமல் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
தனி அலுவலருக்கு பொறுப்பு வழங்கியும் பணிகளை செய்வ தில் தயக்கம் காட்டுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். பெரும் பாலான ஊராட்சிகளில் ஊழியர்களுக்கு சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே, ஊராட்சிகளின் பிரச்சி னைகளை தீர்த்து அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 634 ஊராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றியமும் உள்ளது என்பது குறிப்பிடதாக்கது. இது குறித்து ஊராட்சி செயலர் ஒருவர் கூறும்போது, ‘வரி வசூலிக்க முடியாததால் அடிப்படை வசதிகள் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வரிகளை தவிர்த்து பழைய வரிகளை வசூலிக்க ஊராட்சி செயலரிடம் பொறுப்புகளை வழங்கினால் பிரச்சினை தீரும்’ என்றார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘மாவட்ட நிர்வாகம் தனி அலுவலர் பதவி ஏற்பது குறித்து மட்டுமே அறிவிக்கை வழங்கப்பட்டது. மற்ற நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வந்தால், வழக்கமான அலுவல் பணி நடக்கும்’ என்றார்.
புதிய வரிகளை தவிர்த்து பழைய வரிகளை வசூலிக்க ஊராட்சி செயலரிடம் பொறுப்புகளை வழங்கினால் பிரச்சினை தீரும்.