
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-3ல் 29 காலிப் பணியிடங்கள் மற்றும் செயல் அலுவலர் நிலை-4ல் 49 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெறுகிறது.
செயல் அலுவலர் நிலை 4 பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24-ம் தேதி ஆகும். வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணத்தை டிசம்பர் 27-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும். இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித்தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் குறித்த மேலும் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
TNPSC exam date announced to fill the vacancies for Group III, IV Leval