நாசிக்: ஏழைய, எளிய மக்கள் மட்டுமின்றி ஏடிஎம்களும் வங்கிகளும் கூட பணமின்றி அள்ளாடும் நிலையில், பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களின் அனுபவம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.
மத்தியப் பிரதேச மாநிலம் நாசிக் மற்றும் தேவாஸ் பகுதிகளில் இரண்டு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் இரவு பகலாக பணம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. தினந்தோறும் 20 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
இதைத் தவிர மைசூர் மற்றும் சல்போனியிலும் இரண்டு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலைகளில் இயங்கி வருகின்றன.
2 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்ட ரூ.500 அச்சடிக்கும் பணி நிறுத்தம்
நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தொழிற்சாலைகயில், பழைய 500 ரூபாயை நோட்டுகளை அச்சடிக்கும் பணி 2 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகளை பிரித்தல், எண்களை சேர்த்தல், கட்டுகளாக கட்டுதல் போன்ற பணிகள், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு வெளியாகும் வரை நடந்து கொண்டுதான் இருந்துள்ளது.
பணம் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்குக் கூட, நாம் அச்சடித்துக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவிக்கப்பட உள்ளது என்ற தகவல் தெரியாது. அவர்களும், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பினை தொலைக்காட்சி வாயிலாகத்தான் தெரிந்து கொண்டுள்ளனர்.
புதிய 500 ரூபாய் நோட்டுகள்
நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தொழிற்சாலையில், பிரதமரின் அறிவிப்பு வெளியாக ஒரு வாரத்துக்கு முன்பு தான் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
அதற்கு ஒரு வார காலத்துக்கு முன்புதான், நாசிக் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலைக்கு புதிய ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியது.
புதிய 500 ரூபாயை அச்சடிக்கும் போது கூட, பழைய நோட்டுகள் செல்லாதவையாக போகப்போகின்றன என்று தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.
தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியும் நடந்து வருகிறது.
புழக்கத்துக்கு வராமலேயே சாம்பலாகப் போகும் 30 கோடி ரூபாய் நோட்டுகள்
சிக் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் அச்சடிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள், செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் புழக்கத்துக்கு வராமலேயே எரிந்து சாம்பலாகப் போகின்றன.
பழைய மற்றும் புழக்கத்துக்கு வராத பழைய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்துக்கும் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பான முறையில் எரிக்கப்பட உள்ளது.
குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் விரைவில் சாம்பலாகப் போகின்றன.
இதேப் போலத்தான் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் பொதுமக்களால் டெபாசிட் செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பான இடத்தில் சேர்க்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படும்.
Summary: Banknote printing staff of the 'bizarre' experience - an extensive debate