கேரளாவின் கொச்சியில் உள்ள தூய மார்ட்டின் தேவாலய உண்டியல் பணம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, பணத்தட்டுப்பாட்டால் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதனை உணர்ந்த, கொச்சியில் உள்ள புனித மார்ட்டின் தேவாலய நிர்வாகம் பக்தர்களுக்காக உண்டியலைத் திறந்தது.
பக்தர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப உண்டியலில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்த தேவாலய நிர்வாகம், பணத்தட்டுப்பாடு நீங்கிய பிறகு திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து, தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள், தங்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்துச் சென்றனர்.
எவ்வளவு பணம் எடுக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தேவை இல்லை என தங்கள் பக்தர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்ததாக தேவாலய செய்தித் தாடர்பாளர் ஜிம்மி பூச்சாகாட் கூறியுள்ளார்.