புதுடில்லி : அனைத்து வகைகளிலும் மத்திய அரசு மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என கட்சி எம்.பி.,க்களும் காங், தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.
நலம் விசாரித்த மோடி :
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியதை அடுத்து, கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்., தலைவர் சோனியா இன்று பார்லி., வளாகத்திற்கு வந்தார். அங்கு, கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் பிரதமர் மோடி, சோனியாவை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டதால், பார்லி., வளாகத்தில் கட்சி எம்.பி.,க்களை அழைத்து சோனியா முக்கிய ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சோனியா உத்தரவு :
கூட்டத்தில் கட்சி எம்.பி.,க்களிடம் பேசிய சோனியா, மத்திய அரசுக்கு எதிராக அனைத்து வகைகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும். லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். மக்களின் இன்னல்களை போக்க அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். ரூபாய் நோட்டுக்களை அரசு செல்லாது என அறிவித்ததால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களை உரிமைகளை காக்க போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.