புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் நேர்மையானவர்கள் பயப்பட தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
அமைச்சர் பதில்:
ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த விவாதம் ராஜ்யசபாவில் நடந்து வருகிறது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவுக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நேர்மையானவர்கள் பயப்பட தேவையில்லை. முதல்முறையாக நேர்மையானவர்கள் பாராட்டப்படுகிறார்கள். தவறு செய்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவது தேவையானது.இந்த நடவடிக்கையை எடுக்க பிரதமர் மற்றும் அரசுக்கு உரிமை உள்ளது. கறுப்பு பணத்திற்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும். ஆனந்த் சர்மாவின் பொருளாதாரம் பற்றிய அறிவு குறைவாக உள்ளது. சட்ட விரோதமாக நிதி வாங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நேர்மையானவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசும் பிரதமரும் முதன்முறையாக நாட்டுக்கு கிடைத்துள்ளனர் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசியதாவது: பிரதமர் டிவியிலோ பொது மேடையில் பேசுவதையோ நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் நாங்கள் பேசுவதை பிரதமர் கவனிப்பதில்லை. ஒரு மணி நேரம் ஒதுக்கினால் மதிய உணவை தவிர்த்து அவையில் அமர தயாராக உள்ளோம். முதலில் பிரதமர் இங்கு வருவார் எனு அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் லோக்சபாவில் உள்ளார் என்றார்.
பின்னர் சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் பேசியதாவது: பிரதமர் அறிவிப்புக்கு 2 நாளுக்கு முன்னர் பா.ஜ., எம்.பி.,க்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டுவிட் செய்தனர். கடந்த சில நாட்களில் பலர் இறந்துள்ளனர். வங்கியில் வரிசையில் நிற்போரை மத்திய அரசு கவனிக்க வேண்டும். இந்த நடவடிக்கை எமர்ஜென்சி காலத்தில் கூட நடக்கவில்லை. சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.