மும்பை : பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதால், காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குவது நின்றுவிட்டது என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரீக்கர் தெரிவித்தார்.
முற்றுப்புள்ளி :
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோகர் பரீக்கர் தெரிவித்ததாவது: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச 500 ரூபாயும், வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்கு 1000 ரூபாயும் பிரிவினைவாதிகள் வழங்கி வந்தனர். ரூ.500, ரூ.1000த்தை மத்திய அரசு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் கல்வீச்சு சம்பவமும் நின்றுவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி.
நிலைமை சரியாகும்:
எல்லைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு இரண்டிலும் துணிச்சலுடன், உறுதியான முடிவெடுத்து பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். நாட்டில் தற்போது நிலவும் ரூபாய் பிரச்னை அடுத்த சில நாட்களில் சரியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.