புதுடில்லி:பணப் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து வகை கடன்களையும் செலுத்துவதற்கு, கூடுதலாக, 60 நாட்கள் அவகாசம் அளிப்பதாக, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக, மக்கள் வங்கிகளில் வரிசை கட்டி நிற்கின்றனர்.மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கூடுதலாக, 60 நாட்கள்:
செல்லாத நோட்டுகளை மாற்றுவது, மக்களுக்கு சில்லரை அளிப்பது உள்ளிட்டவற்றில், அனைத்து வங்கிக் கிளைகளும் முழுமையாக ஈடுபட்டுள்ளன. இதனால், வங்கிகளின் மற்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
பலரால், தங்கள் கடன் தவணையை செலுத்த முடியவில்லை என்றும், கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பலர் கோரியுள்ளனர்.அதன்படி, வங்கிகளில் இருந்து பெற்றுள்ள வீட்டுக் கடன், விவசாய கடன்
உட்பட, அனைத்து வகை கடன்களுக்கான, மாதாந்திர தவணையை செலுத்துவதற்கு, வழக்கமான காலத்தைவிட, கூடுதலாக, 60 நாட்கள் அளிக்கப்படும்.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்கு, இது பொருந்தும். நவ., 1ல் இருந்து, டிச., 31க்குள் செலுத்த வேண்டிய தவணைகளுக்கு மட்டுமே, இது பொருந்தும்; இது, ஒரு தற்காலிக ஏற்பாடு தான். இதற்கான, கடன் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யதேவையில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.5.44 லட்சம் கோடி நோட்டுகள் மாற்றம்:
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கடந்த, 10ம் தேதியில் இருந்து, 18 வரை, நாடு முழுவதும் பல்வேறு வங்கிக் கிளைகள், ஏ.டி.எம்.,கள் மூலம், 5.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன. இதில், 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன; 5.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, செல்லாத நோட்டுகள் வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டு உள்ளன. மேலும், வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,கள் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், அதில் இருந்து, ரொக்கக் கடன் மற்றும், 'ஓவர் டிராப்ட்' எனப்படும், வங்கிக் கணக்கில் இருந்து கூடுதல்பணத்தை எடுக்கும் வசதியின் கீழ், வாரத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
500 ரூபாயை பயன்படுத்த விவசாயிகளுக்கு சலுகை:
'செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 ரூபாய் நோட்டை, விதைகள் வாங்குவதற்கு விவசாயிகள் பயன்படுத்தலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள், வேளாண் பல்கலை போன்றவற்றின் விதைகள் மையத்தில் விதைகள் வாங்குவதற்கு, விவசாயிகளுக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
விதைகள் வாங்க செல்லும் போது, தகுந்த ஆதாரங்களுடன், செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 ரூபாய் நோட்டுகளை விவசாயிகள் பயன்படுத்தலாம்; நடப்பு, நடவு காலம் வரை, இது நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வங்கிக் கணக்கில் இருந்து, வாரத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க, விவசாயிகளுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண் காப்பீடு திட்டத்திற்கான தவணையை செலுத்தும் காலமும், 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வேளாண் பொருட்கள் கொள்முதல் மையங்களில் பதிவு செய்துள்ள வியாபாரிகள், ஒரு வாரத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
English Summary:
While the issue of money, to pay for all types of loans, in addition to providing 60-day notice, the Reserve Bank said yesterday.