அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதால், இந்திய உறவில் மாற்றம் ஏற்படாது' என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப்பின் பிரசாரத்தின் போது, இந்திய, சீன நாட்டினருக்கான வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு,அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, உறுதியளித்தார்.
எனவே,தற்போது இந்தியர்களின் நிலை;இந்திய நட்புறவு என்ன ஆகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இதுகுறித்து, சென்னை பல்கலையின், அரசியல் அறிவியல், பொது நிர்வாக துறை பேராசிரியர், எம். கென்னடி ஸ்டீபன்சன் வசீகரன் கூறியதாவது:
அமெரிக்க, இந்திய உறவு என்பது நீண்ட கால அடித்தளம் கொண்டது. அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பனிப்போர் காலத்தில் கூட, 1952 முதல் 1998 வரை, ரஷ்யாவின் பக்கம் இந்தியா இருந்ததாக கூறப்பட்ட போது, பல விஷயங்களில் அமெரிக்காவின் உறவை இந்தியா இழக்கவில்லை.
கிழக்கு பிராந்தியத்தில், ஆசிய நாடுகளில் மிகப் பெரிய வளர்ந்து வரும் ஜனநாயக நாடாகவே, இந்தியாவை அமெரிக்கா பார்க்கிறது. அதனால், இரு நாடுகளின் உறவு வளருமே தவிர சிக்கல் இருக்காது. அணுசக்தி ஒப்பந்தம், விசா வழங்குவதற்கான நிபந்தனைகள், ஆசிய நாடுகளுடனான உறவுகள் போன்ற விஷயத்தில், சில சிக்கல்கள் எழுந்தபோது கூட, இரு நாடுகளின் நட்புறவில் பாதிப்புகள் இல்லை.
தற்போது வெற்றி பெற்றிருக்கும், டொனால்ட் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சியும், ஹிலாரி கிளின்டன் சார்ந்த ஜனநாயக கட்சியும், இந்தியாவை ஒரே பார்வையில் பார்க்கக் கூடியவை. இந்த இரு கட்சிகள் மாறி, மாறி
ஆள்வதால், இந்தியாவிற்கான அமெரிக்க உறவில் எந்த சறுக்கலும் ஏற்படாது.
அங்கிருந்து, இந்தியர்கள் வெளியேற்றப்படுவர் என்ற அச்சம் வேண்டாம். அமெரிக்காவை பொறுத்த வரை, அது பல நாட்டினரும் குடியேறிய தேசமா கவே உள்ளது. அதில், இந்தியர்கள் கணிசமாக உள்ளனர்.அங்கு வாழும் இந்தியர்களும், டொனால்ட் டிரம்ப்விஷயத்தில், அச்சம் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
டொனால்டு டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு பாதகமா; சாதகமா:
அமெரிக்க அதிபராக, அரியணையில் அமர உள்ள டொனால்டு டிரம்ப், கோடீஸ்வர தொழிலதிபர். அரசியல் அனுபவம் இல்லாதவர். தேர்தல் பிரசாரத் தின் போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளி யிட்டு, பின் அவற்றில் இருந்து பின்வாங்கியவர்.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்கர்களிடம் இருந்து பறித்துக் கொண்ட வேலைவாய்ப்புகளை, திரும்பப் பெற, நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர், கூறியிருந்தார். அவரால், இந்தியாவுக்கு முக்கிய ஐந்து துறைகளில் ஏற்படும் சாதக, பாதக அம்சங் களை பார்க்கலாம்:அமெரிக்க நிறுவனங்கள், தற்காலிகமாக தொழில்நுட்ப வல்லுனர்களை பணிக்கு அமர்த்தும், 'எச் - 1பி' விசாவை நீக்குவேன் என, டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது, இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களை பாதிக்கும். இந்நிறுவனங்கள், அவற்றின் பணியாளர்களை, அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பணியாற்ற அனுப்ப முடியாத நிலை ஏற்படும்.
நல்லுறவு:
'இந்தியாவில் நடக்கும் மோடியின் நல்லாட்சி போல, அமெரிக்காவில் ஆட்சி புரிவேன்' என, டிரம்ப் முழங்கியிருந்தார். அத்துடன், இந்தியாவில், பெரிய திட்டங்களில் முதலீடு செய்யஉள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும், இந்தியா - அமெரிக்க இடை யிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவேன் எனவும் தெரிவித்திருந்தார். அதனால், இந்தியா - அமெரிக்க இடையிலான வர்த்தக, ராஜ்ய உறவுகள் வலுப்பெறும்.
பயங்கரவாதம்:
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ் தானை வழிக்கு கொண்டு வர, வலுவான ராணுவமும், அணு ஆயுதமும் வைத்துள்ள இந்தியா தான் சரியான நாடு
என, டிரம்ப் கூறியிருந்தார். அதனால், அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகளை குறைக்கும்; இது, இந்தியா உட்பட, உலக நாடுகளுக்கு சாதகமான அம்சம்.
வர்த்தகம்:
'பொருட்கள் இறக்குமதியை குறைக்க, வரி களை உயர்த்துவேன்; 'கோட்டா'வை குறைப் பேன்' என, டிரம்ப் கூறியுள்ளார். இது, சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளை மட்டுமின்றி, இந்தியாவின் ஏற்றுமதியையும் பாதிக்கும். அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவிற்கு, பி.பி.ஓ., வேலைகளை அளிப்பதற்கும் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்; அதனால், இத்துறையினரும் பாதிக்கப்படக் கூடும்.
இந்திய பொருளாதாரம்:
அரசியல் அனுபவமற்ற டிரம்ப், ராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கப்போவதாக கூறியுள் ளார். இதனால், அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிக்கும். டாலர் மதிப்பு குறையும். பொரு ளாதார மந்தநிலை ஏற்படும்; இது, இந்தியா உட்பட, உலக நாடுகளை பாதிக்கும்.
டிரம்ப்புக்கு இந்தியா மீதும், பிரதமர் மோடியின் மீதும், மரியாதை உள்ளது. அவர் வெற்றி பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு பல விதங்க ளில் லாபம் இருக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுசக்தி வினியோக நாடு கள் கூட்டமைப்பில் இந்திய உறுப்பினராவ தற்கு, அமெரிக்கா ஆதரவு வழங்க முன் வரும். எனவே, மத்திய அரசு, இந்த சூழ் நிலையை பயன்படுத்த வேண்டும்.