சென்னை: 'இலங்கை அருகில், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் நீடிப்பதால், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் :
இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை, இது வரை வலுப்பெறவில்லை. வங்கக் கடல் அருகில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானாலும், காற்று வீசும் திசை மாற்றத்தால், இந்திய கடற்பகுதியில் இருந்து மழை மேகங்கள், வேறு பக்கம் திரும்பி விடுகின்றன. இந்நிலையில், இலங்கை நாட்டின் அருகிலும், அந்தமான் அருகிலும், இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் நிலை கொண்டுள்ளன. அதனால், தென் மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.