சென்னை,: 'முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை, அவரே வெளியிட்டது என்றால் மக்கள் படும் அவதிகளை பற்றி கவலைப்படாமல், ஓட்டுகளை மட்டும் எதிர்பார்க்கிறார் என்பதையே உறுதிப்படுத்துகிறது' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால், மக்கள் தவிக்கின்றனர்.
அவர்களின் துன்பத்தை துடைக்கும் வகையில் உருப்படியான அறிவிப்போ, சிறு ஆறுதலோ இல்லாத வகையில்,இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்; அதற்கு, ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது.
கவலைப்படவில்லை:
அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்படுவது தான், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கான கடைசி அஸ்திரமாகஇருக்கும் என, திரை மறைவிலிருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் கணக்குப் போட்டிருக்கலாம்; அதனால், இப்படியொரு அறிக்கையை வெளியிடச் செய்திருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது. ஜெயலலிதாவின் இந்த அறிக்கை, அவரே வெளியிட்ட அறிக்கை
என்றால் மக்கள் படும் அவதிகளை பற்றி அவர் கவலைப்படவில்லை; ஓட்டுகளை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதையே அது உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.