![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrXWl5ZJQfyvTJMhGYd86pqOmxRMvY_vrxMqKgWrKrqtXMd5a5fBgTzaRXxDv_Z3NIRpXkFc2sdAd5v883WyAEeG9xb_icWdq_DbecivFECRljAVaIQKZme-_Y89yXY8LW9HlgcJLjPLI/s400/GST%255B1%255D.jpeg)
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடைசியாக, கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் ரூ.1.5 கோடிக்கு குறைவாக வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்களின் வரியை மாநில அரசுகளே வசூலிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தின. எனவே, ஜிஎஸ்டி-யில் அதிகார வரம்பை நிர்ணயிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரிக்க அதிகாரப்பூர்வமற்ற வகையில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தை அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். 3 மணி நேரம் வரை நீடித்த இக்கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை மீண்டும் இதே விஷயம் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
English Summary : GST jurisdiction: stalemate continues.Cargo-Service Tax (GST) to determine the law of the jurisdiction between the central and state governments {no final decision has been reached in a speech on Sunday. The talks will continue on Mondays.