சேலம்: சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில், தமிழக ரயில்ேவ எஸ்பி விஜயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காட்பாடி அருகே சிக்னலுக்காக ரயில் நின்றபோது, பயணிகளின் கழுத்தில் கிடந்த தங்க நகைகளை கொள்ளை கும்பல் பறித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், திருப்பூரில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாகவும் விசாரித்துள்ளோம். தனிப்படை போலீசார் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர். விரைவில் அந்த கொள்ளை கும்பலை கைது செய்வோம். ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவுகள், குடிபோதையில் தகராறு போன்றவற்றில் யாரேனும் ஈடுபட்டால், 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்துச்சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ரயிலில் ₹5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவலை சிபிசிஐடி போலீசாருக்கு வழங்கி வருகிறோம். ரயில் கொள்ளை தொடர்பான குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு எஸ்பி விஜயகுமார் கூறினார்.