புதுடில்லி: வங்கிகளில் பணம் மாற்றுவோருக்கு விரலில் அழியாத மையை வைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அழியாத மை:
கள்ள நோட்டு மற்றும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. வங்கிகளில் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கியில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பணம் மாற்றி சென்றனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை குறைக்கும் வகையில் பணத்தை மாற்ற வருவோரின் கை விரலில் அழியாத மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
வேண்டாம்:
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், வங்கிகளில் பணம் மாற்றுவோருக்கு கைவிரலில் அழியாத மை வைக்க வேண்டாம். தேர்தலில் வாக்களிப்போருக்கு மை வைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், அழியாத மை வைத்தால், அவர் ஏற்கனவே ஓட்டளித்தது போல் கருதப்படும் . இதனால் குழப்ப நிலை ஏற்படும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
English Summary:
Do not put ink on the finger to change money in the banks that the Election Commission has requested an immortal.