புதுடில்லி : டில்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள மார்க்கெட்டில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டில்லியின் முண்ட்கா பகுதியில், டில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மார்க்கெட் அமைந்துள்ளது. இதன் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது வழக்கம். இப்பகுதி ஆசியாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் குப்பை கிடங்காக கருதப்படுகிறது. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே காற்று மாசுவால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வரும் தலைநகர் டில்லியில், தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் பற்றி எரிந்து வருவதால் காற்றில் நச்சுக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
English Summary:
Muntka area of Delhi in the morning, a fire occurred in the market. It said that there was no casualty.