உத்தரப் பிரதேசத்தில் பயங்கர விபத்துக்குள்ளான இந்தூர்-பாட்னா விரைவு ரயில் பெட்டியின் சக்கரங்களில் வினோத சப்தம் எழுந்ததாகவும், அதுகுறித்து புகார் தெரிவித்தும் அதனை ரயில்வே அதிகாரி அலட்சியம் செய்ததாகவும் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த ரயிலில் பயணித்த பிரகாஷ் சர்மா (35) என்பவர் கூறியதாவது:
இந்தூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்குப் புறப்பட்ட இந்தூர்-பாட்னா ரயிலின் "எஸ்2' பெட்டியில் நான் ஏறினேன். அப்போது அந்தப் பெட்டியின் சக்கரங்களில் இருந்து வினோதமான சப்தம் எழுந்ததை கவனித்தேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து உஜ்ஜைன் ரயில் நிலையத்தில் இறங்கிய நான், இதுகுறித்து அங்கிருந்த ரயில்வேத் துறை அதிகாரி ஒருவரிடம் புகார் தெரிவித்தேன். எனினும், அவர் அந்தப் புகாரை அலட்சியப்படுத்தினார்.
நான் ரயிலை விட்டு இறங்கிய 12 மணி நேரத்தில் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
English Summary : The strange sound of wheels: official indifference?Uttar Pradesh deadly crashes Indore-Patna Express box on wheels strange sound arose, and immediately report expressing a railway official, ignored the passengers complained.