கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஏரியில் ஏராளமான கொக்குகள் மற்றும் கழுகுகள் இறந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூலகிரியில் உள்ள துரை ஏரியில் தற்போது வறட்சி காரணமாக குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இந்த ஏரியில் வாழும் மீன்களை உணவாக உட்கொள்ள கொக்குகள், கழுகுகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஏரிக்கு வருகின்றன.
இந்நிலையில் பறைவைகளை வேட்டையாட சில மர்ம நபர்கள் மீன்களுக்கு விஷம் வைத்து அதை உண்ணும் பறைவைகளை பிடித்து செல்வதாக புகார் கூறப்படுகிறது. வேட்டையாடப்பட்ட பறவைகள் இறச்சி மற்றும் மருத்துவதேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரிய வகைப்பறவைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.