இன்று (நவ., 14ம் தேதி) வானில் ஒரு அறிவியல் அற்புதம் அரங்கேற உள்ளது. அன்று நிலவு மிக பெரியதாகவும், பிரகாசமாகவும் தெரியும். இதற்கு வழக்கத்தை விட பூமிக்கு அருகே நிலவு வருவது தான் காரணம்.
இது 'சூப்பர் மூன்' என அழைக்கப்படுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பூமிக்கு அருகில் நிலவு வருகிறது. முன்னதாக 1948 ஜன., 26ல் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இந்த 'சூப்பர் மூன்' பூமிக்கு அருகில் வந்த 2 மணி நேரத்துக்குள் முழு நிலவாக பிரகாசிக்கும். 21ம் நுாற்றாண்டின் முதல் பெரிய 'சூப்பர் மூன்' இதுவே.
அடுத்த பெரிய 'சூப்பர் மூன்' 2034 நவ., 25ல் தான் ஏற்படும்.
சூப்பர் மூன்' என்பது, முழு நிலவு அல்லது புது நிலவு என அழைக்கப்படுகிறது. இது, வானியல் பெயர் அல்ல. இதன் அறிவியல் பெயர் 'பெரிஜி'. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவான தொலைவு இருக்கும் போது தோன்றுகிறது.
* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள்
ஆகிறது. அதே போல நிலவு பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது
"சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.
* "சூப்பர் மூன்' என்பது நிலவின் ஒளிப் பெருக்கத்தைக் குறிக்கும் சொல். இதை வானியல் அறிஞர் ரிச்சர்டு நோலே 1979ல் உருவாக்கினார். இது வானியல் தோற்றம் அல்ல; நமது கண்ணுக்குத் தெரியும் தோற்றம். இந்த
மாற்றத்தைக் காண "லேசர் ரேஞ்ச்பைன்டர்' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
* 'சூப்பர் மூன்' 13 மாதங்களுக்கு (413.428 நாட்கள்) ஒரு முறை நிகழ்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இதன் அளவு (வடிவம், ஒளி) வேறுபடும்.
* அடுத்த சூப்பர் மூன் 2018 ஜன., 2ல் தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
* சராசரியாக பூமிக்கும் - நிலவுக்குமான துாரம் 3,84,400 கி.மீ., 'சூப்பர் மூன்' ஏற்படும் அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.
இந்தியாவில் எப்போது
'சூப்பர் மூன்' உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பார்க்க முடியும். இந்தியாவில்
கோல்கட்டாவில் நவ.14இரவு 7.22 மணிக்கு வானம் தெளிவாக இருந்தால் இதனை பார்க்கலாம்.