![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1a2AN2gGQCBpja3mSFvhqYOZ_ZNNGtTqm48L8QW-uCaehVF3iL00xneRn78TQHXTJI0Pm-MiiP6qqb3Wj6acEqHJjkxKjZM2fJYiz3SvQ8VLkqljFxnw9sTkKz9B8YITNX2W4B4-fe5A/s1600/Tamil_News_large_1653817_318_219%255B1%255D.jpg)
சோனியா நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது:
முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டு மக்களுக்காக தன்னுடைய உயிர் உட்பட அனைத்தையும் கொடுப்பதற்காக தயாராக இருந்தார். அவர் கஷ்டப்படும் மக்களிடம் மிகவும் பரிவுடன் இருந்தார். அது தற்போதைய அரசியலில் இல்லாமல் போய்விட்டது.
இந்திரா வீட்டில் மிகவும் புரிதலுடனும் மென்மையாகவும் இருப்பார். உலகம் அவரை எப்படி பார்த்ததோ அதற்கு நேர்மாறாக இருந்தார்
இந்திராவின் இறப்பிற்கு பிறகு எனது கணவர் ராஜிவ் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் உருவானது. அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் பைலட்டாக மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழவே விரும்பினேன்.
எனது கணவர் இறப்பிற்கு பிறகு நான் அரசியலில் நுழைவதா வேண்டாமா என முடிவெடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என் மாமியார் இந்திராவின் கொள்கையால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தேன்.
பா.ஜ.வில் உள்ளது போன்று நரேந்திர மோடிக்கு இணையாக காங்.கட்சியிலும் தலைவர் யாரும் இல்லை என்னும் விமர்சனத்தை நான் ஏற்க மாட்டேன். மேலும், இந்திராவுடன் மோடியை ஒரு போதும் ஒப்பிட முடியாது.
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். அடுத்த பார்லிமென்ட் தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Narendra Modi can not be compared with that of former Prime Minister Indira Gandhi, Congress president Sonia Gandhi said in the interview.