சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், அதிரடி யாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம், நவ., 12ல், சென்னை யில் நடந்தது.
அறிக்கை : இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நேற்று வெளியிட்ட அறிக்கை: வார இதழ் ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டி, தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு, விஷாலுக்கு செப்டம்பரில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு, விஷால் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. இதுபற்றி, செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.இறுதியில், சங்க விதி எண், '14 - டி'ன் படி, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவன உரிமையாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, இன்று முதல் தற்காலிகமாக நீக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம், டிசம்பரில் முடிகிறது. புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், 2017 ஜன., முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. நடிகர் சங்க தேர்தலை போல், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும், விஷால் அணி, தற்போதைய தாணு தலைமையிலான நிர்வாகத்திற்கு எதிராக களமிறங்க உள்ளது.
கோடம்பாக்கம் : இதற்காக, ஐசரி கணேஷ், நாசர் அடங்கிய குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் தாக்கமாகவே, விஷால் நீக்கப்பட்டுள்ளார் என, கோடம்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
'தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் அணி போட்டி'
''திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடு வோம்; இனிமே தான் ஆரம்பம்,'' என, நடிகர் விஷால் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: பெங்களூரு, பி.வி.ஆர்., தியேட்டரில், தாணு தயாரித்த, தெறி படம் உட்பட, ஆர்யா, சூர்யா உள்ளிட்டோர் நடித்த ஏழு படங்களின் திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதுகு றித்தே நான் கேள்வி எழுப்பினேன். அதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரையும், நான் தப்பாக பேசவில்லை. குற்றம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தனர் என கேட்டேன். அது தப்பு என்றால் நான் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பேன். எனக்கே இந்த நிலை என்றால் சிறு தயாரிப்பாளர்களின் கதி எப்படி இருக்கும்; எனக்கு அனுப்பிய, 'நோட்டீஸ்' வழக்கறிஞர் மூலம் தான் வந்தது. அதில், எந்த நிர்வாகியும் கையெழுத்திடவில்லை. அப்படி இருக்கையில், என் பதில் திருப்தி இல்லை என, அவர்கள் கூறியதாக அறிக்கை வெளியாகி உள்ளது; அதிலும், நிர்வாகிகள் கையெழுத்து இல்லை. சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட எந்த கடிதமும் எனக்கு வரவில்லை. இதே போல் தான், நடிகர் சங்கத்திலும் பிரச்னை வந்தது; தேர்தலும் வந்தது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம், இந்தாண்டுடன் முடிகிறது; அடுத்தாண்டு தயவு செய்து தேர்தல் நடத்துங்கள். விஷயத்தை வீதிக்கு கொண்டு வந்துவிட்டனர்; இனி தான் ஆரம்பம். எங்கள் அணி, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும். இன்று நிறைய இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்களாகவும் உள்ளனர். இளைஞர் படை அடங்கிய அணியை களத்தில் நிறுத்துவோம். தேர்தலில் மோதல் இருக்கலாம்; மற்றபடி எந்த நிர்வாகியுடனும் எனக்கு மோதல் கிடையாது. நான் கேட்டது போலவே தான், கருணாஸ் கேள்வி கேட்டதாக செய்தி வெளியானது. கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இவ்வாறு விஷால் கூறினார்.