புதுடில்லி : இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய இணையதளங்கள், சமூக வலை தளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
மத போதகரான ஜாகிர் நாயக், மறைமுகமாக பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள 10 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத லட்சகணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ‛இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, ஜாகிர் நாயக்கிற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜாகிர் நாயக் பேசிய உரைகள் அடங்கிய இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உள்ளது. அவரது புகழை பரப்புவதற்காக துவங்கப்பட்ட பேஸ்புக் பக்கம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கின் பேஸ்புக் பக்கத்தை முடக்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தினரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
English Summary:
Islamic preacher Zakir Naik's speeches, including websites, social web sites, the federal government is paralyzed.