திண்டுக்கல்: ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் பூ மார்கெட்டிற்கு சுற்றுப்புர கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டுவருவது வழக்கம். இங்குள்ள வியாபாரிகள் மலர்களை கொள்முதல் செய்வதோடு பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பூக்கள் விற்பனையாகாமல் தேங்கியிருப்பதால் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் நஸ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.