வாஷிங்டன் : ''இந்தியா தான், எனக்கு மிகவும் முக்கியம்; இந்தியாவின் வளர்ச்சி பணிகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தரும்,'' என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி., பிரமிளா ஜெயபால் கூறினார்.
முதல் இந்திய - அமெரிக்க பெண்:
சமீபத்தில் நடந்த அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, பிரமிளா ஜெயபால், 51, வெற்றி பெற்றார்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்க பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல், இந்திய - அமெரிக்க பெண் இவர் தான்.
உறவை பிரிக்க முடியாது:
இந்நிலையில், வாஷிங்டனில், பிரமிளா ஜெயபால் கூறியதாவது: சென்னையில் பிறந்த நான், 5 வயதில், இந்தோனேஷியாவுக்கு சென்றேன். அமெரிக்காவுக்கு, 16 வயதில் வந்தேன்; இங்கே குடியுரிமை பெற்று, திருமணமும் செய்து கொண்டேன். என் பெற்றோர், இப்போதும், பெங்களூருவில் தான் வசிக்கின்றனர். என மகன் பிறந்ததும் இந்தியாவில் தான். அதனால், எனக்கு இந்தியா மிகவும் முக்கியம். இந்தியாவுடனான என் உறவை யாராலும் பிரிக்க முடியாது.
முக்கிய உறவு:
இந்தியா - அமெரிக்கா உறவை, வெறும் அரசியல் உறவு மட்டுமாக அல்லாமல், மிக முக்கியமான உறவாகவே கருதுகிறேன். வறுமை ஒழிப்பு முதல், மின் திட்டங்கள் வரை, அனைத்துக்கும், இந்தியாவுக்கு, அமெரிக்கா ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
'' India is very important to me; The United States will always support India's development projects, '' the Indian-origin American MP, Jaipal said Pramila.