விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் (யு.என்.எஸ்.சி.) இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு, அந்தக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷிய கூட்டமைப்பு, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினராக இடம்பெற்றுள்ளன. இது தவிர, 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ஐ.நா. பொதுச் சபை கூட்டம், நியூயார்க்கில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்துவது குறித்து 50க்கும் மேற்பட்டோர் தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் போன்ற எழுச்சி பெற்று வரும் நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ள பிரிட்டனும், பிரான்ஸýம், இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு குரல் கொடுத்தன.
அந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதர் மேத்யூ ரைகிராஃப்ட் பேசுகையில், ""விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்;
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே கடந்த வாரம் இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியுடன் இதுதொடர்பாக விரிவாக விவாதித்தார்'' என்றார்.
இதேபோல், பிரான்ஸ் துணைத் தூதர் அலெக்ஸிஸ் லேமக்கும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தெரிவித்தார். மேலும், போர்க்குற்றம், இனப்படுகொலை ஆகிய விவகாரங்களில் நிரந்தர உறுப்பினர்கள் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜி-4 நாடுகள் சார்பில் கலந்து கொண்ட ஜெர்மன் தூதர் ஹரால்டு பிரவுன் பேசுகையில், ""ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில், அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். எனவே, தற்போதைய சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அந்த அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிறப்பாக செயல்படுவதற்கு அனைத்துப் பிராந்திய நாடுகளும் உறுப்பினராக இடம்பெற வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பேசுகையில், ""தற்போதைய சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும்'' என்றார்.