சுதந்திர போராட்டத் தலைவர்களை நினைவுக் கூறும் நிகழ்ச்சிகளை வைத்து, பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையில், போட்டா போட்டி நடப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர போராட்டத்தில், எண்ணற்ற தலைவர் கள் பங்கேற்று, தங்கள் அளப்பரிய பங்கை செய்துள்ளனர். ஆனாலும், அனைவருக்கும் சம அளவிலான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற விமர்சனம், பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, தற்போது, தேசிய அரசி யலை, பா.ஜ.,வும், காங்கிரசும் சூடேற்றி வருகின்றன.
அக்., 2, மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அதே நாளில் தான், முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் பிறந்த நாளும் கூட; ஆனால், அந்த நாளில், காந்தியின் அளவுக்கு, சாஸ்தி ரியை யாரும் கொண்டாடுவது இல்லை.
காங்., தலைவர் என்றாலும், அவர், நேரு குடும்பத்தைச் சேராதவர் என்பதால், பல ஆண்டு களாக, ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சாஸ்திரியை புறக்கணிப்பதாக விமர்சனம் இருந்தது.
பா.ஜ., ஆட்சி தற்போது நடப்பதால், இந்த ஆண்டு, சற்றே மாற்றம் காணப்பட்டது. காந்திக்கும், சாஸ்திரிக்கும், சமஅளவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு, டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை கவனித்த, காங்., தலைவர்கள், 'சாஸ்திரியின் புகழையும், பெருமையையும், பங்கு போட, பா.ஜ., முயற்சிக்கிறது' என குற்றச்சாட்ட, சலசலப்பு உருவானது.அதே போல், அக்., 31ல், முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாள் வந்தது. அதே தினத்தில் தான், நாட்டின் முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேலின், பிறந்த நாளும் வந்தது.
மத்திய அரசின் முழு கவனமும், படேல் மீது இருந்தது. டில்லி முழுவதும், படேலின் போஸ்டர் களை பார்க்க முடிந்தது. பார்லி., சாலையில் உள்ள படேலின் சிலைக்கு, பிரதமர் மோடி மாலையிட் டதை, பா.ஜ., விழாவாகவே கொண்டாடியது. 'ஒற்றுமை ஓட்டம்' என்ற பெயரில், பேரணியும் நடந்தது. அதே சமயம், அன்று, அரசின் சார்பில், இந்திராவின் நினைவு நாள் தொடர்பாக, ஒரு நிகழ்ச்சிக்கு கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.
இதை கவனித்த காங்கிரஸ், 'நாட்டின் பிரதம ராக இருந்தவர் இந்திரா. அரசியல் காரணங்க ளுக்காக, சரியல்ல'
இவரது நினைவு தினத்தை, பிரதமரும், மத்திய அரசும் புறக்கணிப்பது எனக்கூறி, கட்சி ரீதியாக, சில நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்நிலையில் தான், வரும், 19ல், இந்திராவின் பிறந்த நாள் வரவுள்ளது. பா.ஜ.,வுக்கு பதிலடி தரும் வகையில், இந்திராவின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட, கட்சியினருக்கு, காங்., மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
அன்று, இந்த ஆண்டு, கூடுதல் முக்கியத்து வத்தை ஏற்படுத்தும் வகையில், உ.பி., சட்ட சபை தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக, பிரியங்காவை தீவிரமாக களமிறக்கும் ஏற்பாடு களும் நடக்கின்றன. இதனால், காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே, போட்டி தீவிரமாகி பரபரப்பு காணப்படுகிறது.