1830- நவம்பர் 22
ராணி லட்சுமிபாய் போல உடையணிந்து, கம்பீரமாக குதிரையில் ஏறி, ஆங்கிலேய படையை எதிர்கொண்டவர், வீரமங்கை ஜல்காரிபாய்!உ.பி.,யில், போல்ஜா என்ற கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்தார்; தந்தையின் வழிகாட்டுதலில், ஆண் போல வளர்ந்தார். குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட கலைகளில், தேர்ச்சி பெற்றார்.
காட்டில், தன் கோடரியைப் பயன்படுத்தி, புலியைக் கொன்றதிலிருந்து, ஜல்காரிபாயின் புகழ் பரவத் துவங்கியது.ராணி லட்சுமிபாயின், பீரங்கிப் படையைச் சேர்ந்த, பூரண் சிங்கை மணந்து கொண்டார். பெண்கள் படையில் இணைந்து, துப்பாக்கி, பீரங்கிகளை கையாளுவதில் திறமை பெற்றார்.
கடந்த, 1858ல், ஆங்கிலேய படை, ஜான்சி கோட்டையை முற்றுகையிட்டது. ராணி லட்சுமிபாய், போர் புரியக்கூடிய நிலையில் இருக்கவில்லை. எனவே, லட்சுமிபாய் போல் உடையணிந்து, படையை வழிநடத்திச் சென்றார். பராக்கிரமத்துடன் ஆங்கிலேய படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். 1890ல் இறந்ததாக கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
வீரமங்கை ஜல்காரிபாய் பிறந்த தினம் இன்று!
English Summary:
1830- November 22,
dressed like Rani of Jhansi, majestic horse, rode in the British army faced jalkaripay viramankai! Uttar Pradesh, polja in the village, was born in a family of farmers