சில்லறை வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், சில்லறை வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தோடு, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஆனால், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு அருகில் உள்ள சில்லறைக் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இதன் காரணமாக சில்லறை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளையன் தெரிவித்துள்ளார். இதுதான் அரசின் நோக்கம் என குற்றம் சாட்டியுள்ள அவர், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சி இது எனவும் வெள்ளையன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
Retail trade and eliminate 500 thousand rupee notes the intention of the federal government would stop short of proclaiming the Tamil Nadu Societies Council has accused the businessman.