நாகப்பட்டிணம்: காவிரி டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றர். பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் வயலுக்கு சென்ற தனுசம்மாள் பயிர் கருகிய அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார். நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை கிராமத்தில் பெண் விவசாயி ஜெகதாம்பாள் 18 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது. கருகிய பயிர்களை கண்ட ஜெகதாம்பாள் மன உளைச்சலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
காவிரி தண்ணீர் பற்றாக்குறை:
இந்தாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை தரவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து முதலில் 15 ஆயிரம் கன அடியும், அடுத்து 6 ஆயிரம் கன அடியும், கடைசியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு திறக்க உச்சநீதிமன்ற உத்தரவுகளில் அடுத்தடுத்து தெரிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி:
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி சம்பா சாகுபடி துவங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சம்பா சாகுபடி பொய்த்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்குவதற்கு வசதியாக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை நம்பி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட டெல்டா பகுதிகளில் விவசாயிகள் 18 லட்சம் ஏக்கரில் நேரடி நெற்பயிர் விதைப்பில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் தற்கொலை:
தமிழக அரசு அறிவித்தபடி, 62 நாட்களுக்கு மேலாகியும் மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை. இதனால், தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் விதைத்த நெற்பயிர்கள் கருக தொடங்கியது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மரணமடைவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
மாரடைப்பில் மரணம்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ரகுநாதபுரத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன்,திருவையாறு அடுத்த கீழ்த்திருப்பூந்துருத்தி ராஜேஷ்கண்ணன், ஆதனூர் ரத்தனவேல், கீழ்வேளூர் நவநீதம், வேதாரண்யம் ஜெயபால் ஆகியோர் காய்ந்த பயிர்களை பார்த்தமாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
தொடரும் மரணங்கள்
வேதாரண்யம் அருகே உள்ள பிரிஞ்சிமூலையை சேர்ந்த முருகையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட விவசாயி பாலசுப்ரமணியன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நாகை மாவட்டம் கீழ் வேளூர் அடுத்த தேமங்களம் தெற்குவெளி மாதாகோயில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி தனது வயலில் பயிர் வாடி இருப்பதை பார்த்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
14 பேர் மரணம்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை உக்கடை கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி உட்பட தமிழகம் முழுவதும் 14 விவசாயிகள் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். தமிழக அரசு எந்தவித நல திட்டங்களையும், நிவாரணங்களையும் அறிவிக்காதது மட்டுமின்றி, ஆறுதல் வார்த்தை கூட கூறாதது ஒட்டுமொத்த விவசாயிகளின் மத்தியில் கடும் அதிருப்தியையும் தொடர் சோகத்தையும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டில் 2,450 பேர் உயிரிழப்பு:
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளாக சம்பா மற்றும் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நேரடி பயிர் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 2,450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சாகுபடி பரப்பு குறைந்தது:
தண்ணீர் வரத்து பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு முறையான விலை நிர்ணயிக்காதது உள்ளிட்ட காரணங்களால் 24 லட்சம் ஏக்கரில் இருந்து 18 லட்சம் ஏக்கராக காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்கள் குறைந்துள்ளன. தமிழகம் முழுவதும் 48 லட்சம் ஏக்கராக விவசாய நிலங்கள் குறைந்துள்ளன.
English summary:
Farmer one among the thousands worried over the fate of their standing samba crop in the Cauvery delta region, died.14 farmers in the past one month adding to the gloom in the region.