இதில் பங்கேற்பதற்காக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மேகாலயப் பிரிவின் தலைவர் பி.கே.துபே தலைமையில் 15 பிரதிநிதிகள் இந்தியா சார்பில் வங்கதேசம் சென்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வங்கதேச எல்லை வழியே இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் பெருமளவு கடத்திக் கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பாகவும், கள்ள நோட்டு கடத்தலைத் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இரு நாடுகளும் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளன.
மொத்தம் 4 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் எல்லையில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.