நியூயார்க்: அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக எதிர் காலத்தில் தமிழ் பெண் கமலா ஹாரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியருக்கு மகளாக கமலா ஹாரிஸ் பிறந்தார்.
கலிபோர்னியா அரசு தலைமை வழக்கறிஞராக 2 முறை பதவி வகித்த 51 வயதான கமலா ஹாரிஸ் தற்போது செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோரட்டா சான்செஸ் என்பவரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர், குறிப்பாக பெண் ஒருவர், தேர்வானது இதுவே முதல்முறை இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆக எதிர்காலத்தில் வரக்கூடும் என அங்குள்ள இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது.
‘கலிபோர்னியா மாநிலத்தின் புகழ்பெற்ற அரசு வக்கீலாக இருந்து, தற்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கிச் செல்லும் இவர், அடுத்தாக செல்லப்போகும் இடம் வெள்ளை மாளிகையாக இருக்கும்’ என அந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. 2020-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கமலா ஹாரிஸ் தீர்மானிக்க வேண்டும் எனவும் அந்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்புக்கு பான் கி மூன் வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நேற்றுமுன்தினம் பிற்பகல் தொலைபேசி மூலம் பான் கி மூன் தொடர்பு கொண்டு டிரம்ப்பிடம் பேசினார். அப்போது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அமெரிக்க மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று டிரம்ப்பிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அமொிக்கா மற்றும் ஐநா இடையே பாரம்பரிய முறைப்படி நிலவிவரும் ஒத்துழைப்பு நீடிக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் ஐநாவின் முடிவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக இருவரும் தொடர்ந்து பேச முடிவு செய்யப்பட்டது.