புதுச்சேரி முதல்வரும், காங்., மூத்த தலைவருமான நாராயணசாமி மீது, அ.தி.மு.க., - என்.ஆர்.காங்கிரஸ், எம்.பி.,க்கள், தலைமை தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதி யில், காங்., வேட்பாளராக, அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில், ஓம்சக்தி சேகர் நிறுத்தப்பட்டு உள்ளார். அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், நேற்று டில்லியில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், செங்குட்டு வன், கோகுலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸ், எம்.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனுக்கு வந்தனர்.
இவர்கள், தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் அளித்த புகார் மனு: முதல்வர் நாராயணசாமி, தேர்தல் பிரசாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். தொகுதி முழுவதும், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார். வாக்காளர்களுக்கு, பெருமளவில் பணப் பட்டுவாடா நடக்கிறது; பிரிட்ஜ் தருவதாக கூறி, டோக்கன்களும் தரப்பட்டு உள்ளன. எனவே, தேர்தல் முடியும் வரை, முதல்வர் அலுவலகத்தை, அவர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.