ஆசியாவின் முக்கிய பங்குச்சந்தைகளில் ஒன்றும், ஜப்பான் நாட்டின் பங்குச்சந்தையுமான நிக்கி குறியீட்டெண் இன்று காலையில் ஆரம்ப வர்த்தகத்தில் 6 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
நேற்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நிக்கியின் குறியீடு 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சிடைந்ததை சரி செய்வதாக இன்றைய அதிகரிப்பு உள்ளது.
வரி குறைப்பு மற்றும் கட்டமைப்பிற்கான செலவுகள் ஆகியவற்றை தான் மேற்கொள்ளப் போவதாக, டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்த காரணத்தால் பங்குச்சந்தைகளில் மேலும் உற்சாக மனநிலை காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள பங்குச்சந்தைகளில் ஆரம்ப நடுக்கங்கள் ஏற்பட்டாலும், நாளின் நேற்றைய முடிவில் இந்த பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.