நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகரமாக மிரட்டல் விடுப்பதை பிரதமர் நரேந்திர மோடி நிறுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டுக்காக தனது கிராமத்தையும், தனது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி பிரிந்திருந்தால் அது நல்லதுதான். ஆனால் அதற்காக அவர் பக்குவமில்லாத முடிவுகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் அவரது முடிவுகளால், நாட்டு மக்களின் நலன்கள்தான் பாதிக்கப்படுகின்றன.
பிரதமர் மோடியின் முடிவால் (ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது), நாட்டு மக்கள் பெரும் துன்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகரமாக மிரட்டல் விடுப்பதை மோடி நிறுத்த வேண்டும்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தோல்விகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேற்கண்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்தான், கருப்புப் பணப் பிரச்னையை மோடி புரிந்து கொண்டாரா? அவரின் முடிவால், நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் அதிருப்தியில் உள்ளனர். மோடியின் முடிவால் ஏழைகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை மோடி எடுக்கவில்லை என்றார் மாயாவதி.
மத்திய அரசுக்கு சமாஜவாதி கண்டனம்: இதனிடையே, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் சகோதரரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சிவ்பால் சிங் யாதவ் பேசியபோது, மத்திய அரசின் முடிவால், சாமானிய மக்களுக்கு பெரும் துயரம் ஏற்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தங்களது சொந்த பணத்தை எடுப்பதற்கு வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் நீண்டதூரம் காத்துக் கிடக்கின்றனர்; நாடு முழுவதும் வர்த்தகம் முடங்கிவிட்டது' என்றார்.
முன்னதாக, கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மோடி உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது அவர், நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக தனது குடும்பத்தையும், கிராமத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.