வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததால் ஆதரவாளர்கள் மனம் தளர வேண்டாம் என ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களை ஹிலாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தலில் தோல்வி:
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக இருந்த போதும், அவை அனைத்தையும் பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்றார். அத்துடன் அமெரிக்க பார்லியில் அதிக இடங்களை குடியரசு கட்சி பெற்றதால், ஹிலாரி ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்கா உச்சம் தொடும்:
இந்நிலையில் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. தேர்தல் தோல்விக்கு பின் முதன்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹிலாரி பேசியதாவது: தேர்தல் தோல்வியால் நீங்கள் அடைந்துள்ள அதிருப்தி போலவே எனக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தோல்வியை கண்டு மனம் தளரா மல், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். நாட்டு மக்களிடையே ஆழமான பிளவுகள் ஏற்பட்டுள்ளபோதும், அதைத் தாண்டி அமெரிக்கா உச்சத்தை எட்டும். நாட்டின் மீது நம்பிக்கை வைத்து, நம் மதிப்புகளைக் காக்கப் போராடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
The failure of the US presidential election, Democratic supporters of Hillary urged supporters not to discourage the mind.