![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxHni4jvnS01y4bYYLXBsu8_dARbHoHjHcck645o84EWQ4vOQXNcBWD8H-tzmQyePdBRIIaxaqCx4pLw4ldYCjO0LUsB2Px858z2bcFcnCayA3U2TGXUdSx42SpU73AzK7HvOYrPOVG8U/s1600/Tamil_News_large_165308820161120231830_318_219%255B1%255D.jpg)
ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்டுள்ள ஜன் தன் வங்கிக் கணக்கில், கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டது. இதனால் சில சிரமங்கள் ஏற்படும்.வேண்டுகோள் இருப்பினும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கைக்காக, அரசுக்கு, 50 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
இத்தனை பெரிய நாட்டில், இந்த மிகப்பெரிய பிரச்னைக்கு தீர்வு காண, 50 நாட்கள் இந்த சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என, மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த, 50 நாட்களுக்குப் பின், மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
இந்த திட்டத்தால், உண்மையில் பாதிக்கப்படு வது, கறுப்புப் பண முதலைகளே. அதனால் தான், அவர்கள் இதை எதிர்க்கின்றனர்; குறுக்கு வழிகளில், பணத்தை மாற்ற முயற்சிக்கின் றனர்.
மக்களின் நலனுக் காக கொண்டு வரப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தை, இவர்கள் பயன்படுத்துவ தாக தகவல் கிடைத்துள்ளது. உங்கள் கணக்கில், 2.5 லட்சம் ரூபாயை முத லீடு செய்வர்; 'ஆறு மாதங்களுக்குள், இரண்டு லட்சம் ரூபாயை தந்தால் போதும்; உங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறுவர்.
மிகச் சரியாக திட்டமிட்டு, பல்வேறு கட்டுப்பாட்டு கள், கண்காணிப்புடன் தான் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உங்கள் கணக்கில் சேரும் இந்த திடீர் பணம் குறித்து கேள்வி எழுப்பப்படும். அப்போது, கறுப்புப் பண முதலைகள் தப்பிவிடுவர்; சாதாரண மக்கள் தான் சிக்க வேண்டும்.
கறுப்புப் பணத்துக்கு எதிரான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அப்பாவி மக்கள் இதில் சிக்க வேண்டாம். உங்கள் கணக்கில் மற்றவருடைய பணத்தை டிபாசிட் செய்ய அனுமதிக்காதீர்; சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம்.
பாராட்டு:
செல்லாத நோட்டுகளை மாற்றித் தருவதில், திறம் பட செயல்படுத்தி வரும் அனைத்து வங்கிகளுக்கும், ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் என் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன்.அரசின் நோக் கத்தை புரிந்து,ஆதரவு அளித்து வரும் அனைத்து பொதுமக்களுக்கும் பாராட்டுகள்.இவ்வாறு அவர் பேசினார்.
அனைவருக்கும் வீடு:
அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட் டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முறைப்படி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, கிராமப் பகுதி யில் உள்ள, ஐந்து கோடி பேருக்கு, வரும், 2022 ம் ஆண்டிற்குள், சொந்த வீடு கட்டித் தரப்பட உள்ளது.
மின்சாரம், குடிநீர், சமையல், 'காஸ்' உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 2019க்குள், ஒரு கோடி பேருக்கு வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மம்தா - மாயாவதிக்கு சூடு:
ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில், அரசின் நட வடிக்கையை எதிர்த்து விமர்சனம் செய்து வரும்,
திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்கள் குறித்து மோடி பேசியதாவது:
லட்சக்கணக்கான மக்கள், சேமிப்பு என்ற பெயரில், 'சிட்பண்ட்' திட்டங்களில் முதலீடு செய்கின்ற னர். ஆனால், சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், தற்போது அர சின் திட்டத்தை எதிர்க்கின்றனர்.கடந்த,70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கு, மக்கள் நலனை விட, ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம்.
கறுப்புப் பணம் எத்தனை பெரிய நோய் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை; காரணம், ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது தான்.செல்லாத நோட்டு அறிவிப்பால், சில கட்சிகளும் பாதிக்கப் பட்டுள்ளன.
எம்.எல்.ஏ., 'சீட்' வேண்டுமானால், இத்தனை கோடி கொடுக்க வேண்டும் என்று பணத்தை
வாங்கியுள்ளனர்; தற்போது அது செல்லாததாகி விட்டது. அதனால் தான், அரசின் திட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Relying on the words of the love of money laundering crocodiles, your, 'Jan's' Let invest money in a bank account; If done so, the crackdown, '' Prime Minister Narendra Modi has warned.