புதுடில்லி : இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதில், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது, காஷ்மீர் பதற்ற நிலை, ஓஆர்ஓபி விவகாரம் உள்ளிட்டவைகள் தொடர்பாக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆக்கபூர்வமான, வெளிப்படையான விவாதங்கள் நடக்கும் என பிரதமர் மோடியும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இருஅவைகளிலும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. லோக்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராஜ்யசபா அலுவல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ராஜ்யசபாவில் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை துவங்கியதும், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக பேச எதிர்க்கட்சிகள் அனுமதி கேட்டன. இதற்கு அனுமதி மறுத்த ராஜ்யசபா சபாநாயகர் குரியன், கேள்வி நேரத்தை ஒத்திவைத்தார். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதம் நடந்து வருகிற