கோவில்பட்டியில் பால் கொள்முதலுக்கு பணம் தர மறுத்து வரும் கூட்டுறவு வங்கி கிளையை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 150க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் இருந்து பணம் எடுத்து 15 நாள்களுக்கு ஒருமுறை பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வருவது வழக்கம். தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பாலும், சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் எடுக்க முடியும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதால் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே தங்களுக்கான பணத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை திடீர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.