புதுடில்லி : விமான நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரத்து காலத்தை நவம்பர் 28-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதால் ரூ.100, ரூ.50 என குறைந்த மதிப்பிலான நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருவதால், விமான நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒரு வார காலம் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டது. இந்நிலையில் ரத்து காலத்தை 28-ந் தேதி நள்ளிரவு வரை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இது இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மற்றும் தனியார் நிர்வகிக்கும் அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Airports Parking fee cancellation period November 28-November until midnight and extended federal civil aviation ministry said.