புதுடில்லி: இந்தியாவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, இந்துக்கள் கண்டிக்கின்றனர். ஆனால் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது இங்குள்ள முஸ்லிம்கள் மவுனமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
கண்டிப்பு:
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத் கூறுகையில், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டது முதல் ஜார்க்கண்டில் இளைஞர்கள் தாக்கப்பட்டது என இந்தியாவில் முஸ்லிம்கள் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், இந்தியாவில் உள்ள இந்துக்கள் கண்டித்துள்ளனர். மதச்சார்பின்மை குறித்து அவர்கள் தெளிவாக உள்ளனர். முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது, ஆர் எஸ் எஸ் மற்றும் பா.ஜ., மீது இந்துக்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்ததை அனைவரும் டிவியில் பார்த்திருக்கலாம்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும்போதெல்லாம், நாம் ஏன் கண்டிக்கவில்லை. நாம் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கண்டிக்க ஆரம்பிக்கும் போது, முஸ்லிம்களுக்கு எதிரான பா.ஜ.,வின் வேஷம் அம்பலமாகும் என்றார்.
English Summary:
While attacks on Muslims in India, Hindus condemn.