திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணையில் ஒரு மாத காலமாக தண்ணீரில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
சாத்தனூர் அணை நீர்தேக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் ஒரு மாதமாக அணையில் மிதப்பதாக அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட பகுதி தங்களது சரகத்திற்கு உட்பட்டதல்ல என வனத்துறையினர் தட்டி கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சாத்தனூர் அணையில் மிதந்த சடலத்தை ஒரு மாதமாக அகற்ற முன்வராத வனத்துறையினர் நடவடிக்கை பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary:
Sathanur dam near Thiruvannamalai district Chengam unidentified female corpse floating in the water for a month, police seized, sent to the autopsy.