புதுடில்லி : பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் துவங்க உள்ளதையடுத்து லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம் :
பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகின்ற புதன்கிழமை கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று( நவம்பர் 14) இரவு 7 மணியளவில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது, பார்லி., குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்துகிறார். இதேபோன்று கூட்டத் தொடருக்கு முதல் நாளான நவம்பர் 15 அன்றும் மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
புயலை கிளப்ப திட்டம் :
பிரதமர் நரேந்திரமோடி ரூ.50
0 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இருப்பினும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆரம்பம் முதலே இது பலன் தராத நடவடிக்கை என்று எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி மசோதா, எல்லையில் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமல்லாது பழைய நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து நவம்பர் 16-ம் தேதி பார்லி., கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.