புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை, பார்லி., வளாகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் இன்று சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
ஜெட்லியிடம் கோரிக்கை :
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பி.,க்கள் ஜெட்லியை சந்தித்தனர். அப்போது, வர்த்தக வங்கிகளை போல் கூட்டுறவு வங்கிகளிலும் டெபாசிட் பெற அனுமதிக்க வேண்டும். தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு பயிர்கடனான ரூ.3000 கோடி வழங்க வேண்டும். விவசாயிகள் கடன் பிரச்னையை தீர்க்க வங்கிக் கடனை கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்த அனுமதி அளிக்க வேண்டும். பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி கூட்டுறவு வங்கிக் கடன்களை செலுத்த அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் கடன் குறித்த நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். ஆரம்ப கூட்டுறவு சங்கங்களுக்கு வாரத்திற்கு தலா ரூ.24,000 வழங்க வேண்டும். ரூபாய் நோட்டு விவகாரத்தில் விவசாயிகளின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜெட்லியிடம் அளித்தனர்.
முன்னதாக மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி., வளாகம் முன் பல்வேறு எதிர்க்கட்சிகள் நடத்திய தர்ணா போராட்டத்தில் அதிமுக.,வும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Finance Minister Arun Jaitley, barley., Campus AIADMK MPs met today. Farmers need to take action to resolve the problems that they present the various demands.