புதுடில்லி : இன்று துவங்கும் பார்லி., குளிர்கால கூட்டத்தில் வெளிப்படையான, அதேசமயம் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பார்லி.,க்கு வந்த பிரதமர் மோடி, பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆலோசனை:
அப்போது பேசிய அவர், கடந்த கூட்டத்தொடரின் போது ஜிஎஸ்டி போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது மிகப் பெரிய நடவடிக்கை. இதனை நிறைவேற்ற உதவிய எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பல ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்க உள்ளன. அனைத்து விவகாரங்கள் குறித்தும் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும். பல்வேறு விவகாரங்கள் குறித்து நல்லதொரு விவாதங்கள் நடக்கும் என நம்புகிறேன். அந்த விவகாரங்களில் அனைத்து கட்சிகளும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். மக்களின் நன்மைக்காக அதனை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்வோம்.
தயார்:
ஒவ்வொரு விவகாரம் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. அதன் முடிவில் மிக நல்ல முடிவுகள் எடுக்கப்படும். வரி முறையை சீர்திருத்தம் செய்ய நினைக்கிறோம். எங்களின் நடவடிக்கைகளின் நோக்கம் இந்தியாவிற்கு நன்மை தருவது மட்டுமே. எம்.பி.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் அது வெற்றிக்கு வழிவகுக்கும்.நாட்டின் நன்மைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனக்கூறினார்.